போலி பிளாஸ்டிக் நிறுவனத்தில் போலீசார் சோதனை
போலி பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்த தனியார் நிறுவனத்தில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் ரூ.38½ லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை,
மும்பையை சேர்ந்த பிரபல நிறுவனம் வீட்டு உபயோக மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தயார் செய்து நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இதற்கான காப்புரிமையையும் அந்த நிறுவனம் பெற்றுள்ளது.
இந்தநிலையில் இந்த நிறுவனத்தின் பெயரில் மதுரை கப்பலூரில் உள்ள தனியார் பிளாஸ்டிக் நிறுவனம் வீட்டு உபயோக பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளது. இதனை அறிந்த மும்பை நிறுவனத்தின் நிர்வாகி ஸ்ரீஹர்திருப்பட்டி, இதுகுறித்து மதுரை அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர்கள் லதா, ஆனந்தஜோதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஞானசேகரன், சேதுராமநாதன் அடங்கிய குழுவினர் கப்பலூரில் உள்ள அந்த நிறுவனத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.
சோதனையில் மும்பை நிறுவனத்தின் பெயரில் பிளாஸ்டிக், மற்றும் வீட்டு உபயோக பொருட்களை தயாரித்து மோசடி செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலியாக தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக், வீட்டு உபயோக பொருட்களை போலீசார் கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.38½ லட்சம் ஆகும்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் லதா கூறும்போது, பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி நிறுவனம் செயல்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை செய்தோம். சோதனையில் அந்த நிறுவனத்தில் போலி பிளாஸ்டிக், வீட்டு உபயோக பொருட்கள் தயாரித்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கிருந்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தோம். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் குணசிங் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறோம்.
மேலும் மதுரை புறநகர் மற்றும் நகர் பகுதிகளில் சோதனை தொடரும். இதுபோன்று போலியான பொருட்கள் தயாரித்து விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Tags :
Next Story