மதுரையில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள்
மதுரையில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. புத்தகம் வெளியிட்டுள்ளார்.
மதுரை,
மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, மதுரை மக்களுக்கு தேவையான திட்டங்கள் குறித்து “நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்“ என்ற தலைப்பில் புத்தகம் எழுதி உள்ளார். அதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
இந்த புத்தக வெளியீட்டு விழா, மதுரையில் நேற்று நடந்தது. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார். ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன், அரசு செயலர் நந்தகோபால், கலெக்டர் வீரராகவராவ், போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால், மாநகராட்சி ஆணையாளர் அனீஷ் சேகர், துணை வேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் ரத்தினவேல் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
மதுரையின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பெரியார் பஸ் நிலையம், கோரிப்பாளையம், காளவாசல் ஆகிய பகுதிகளில் உயர்மட்ட மேம் பாலங்கள் அமைத்திட வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனையை நிச்சயம் மதுரையில் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரையின் தென்பகுதியில் மிகச்சிறந்த விளையாட்டு மைதானம் மற்றும் உள்விளையாட்டு அரங்குகள் அமைக்க வேண்டும். அரசு சார்பாக புதிய கலைக்கல்லூரி மற்றும் என்ஜினீயரிங் கல்லூரி தொடங்கிட வேண்டும். நவீன மீன் மார்க்கெட் வேண்டும்.
மாநகராட்சியின் விரிவாக்க பகுதிகளில் உடனடியாக பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர வேண்டும். மதுரையில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்றப்படி தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மதுரையை சுற்றிலும் சுற்று வட்ட சாலை அமைக்க வேண்டும். அதிக வேலை வாய்ப்புகள் அளிக்கக்கூடிய வகையில் புதிய தொழிற்சாலைகள் வேண்டும். மீனாட்சி அம்மன் தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் நிரப்புவது போல், மாரியம்மன் தெப்பக்குளத்தில் எப்போதும் தண்ணீர் நிரப்ப வேண்டும். வைகைக்கரை சாலைகளை சீரமைத்து, சாலை ஓரங்களில் பூங்காக்கள் அமைக்க வேண்டும். மதுரையில் பண்டைய மன்னர்களால் உருவாக்கப்பட்ட உட்கட்டமைப்புகளை பாதுகாத்திட வேண்டும். மேலும் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி குறித்து முழு தகவல்களும் அதில் இடம் பெற்றுள்ளன.

Related Tags :
Next Story