வேலையில் இருந்து நீக்கப்பட்ட மனவேதனையில் விஷ ஊசிபோட்டு ஒருவர் தற்கொலை
வேலையில் இருந்து நீக்கப்பட்ட மன வேதனையில் விஷ ஊசிபோட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
மும்பை,
வேலையில் இருந்து நீக்கப்பட்ட மன வேதனையில் விஷ ஊசிபோட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் அங்குள்ள வழிபாட்டு தல கழிவறைக்குள் பிணமாக கிடந்தார்.
கழிவறைக்குள் பிணம்மும்பை மாகிம் பகுதியை சேர்ந்தவர் வினோத்(வயது39). இவர் வேலை பார்த்து வந்த இடத்தில் பணியில் இருந்து கடந்த இரண்டு மாதத்திற்கு முன் நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்தார். இந்தநிலையில், சம்பவத்திற்கு 2 நாட்களுக்கு முன்னால் திடீரென காணாமல் போய்விட்டார். எங்கு தேடியும் வினோத்தை கண்டுபிடிக்க முடியாததை அடுத்து அவரது சகோதரர் மாகிம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில், நேற்றுமுன்தினம் மாலை மாகிமில் உள்ள ஒரு வழிபாட்டு தலத்தின் வளாகத்தில் உள்ள கழிவறைக்குள் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தற்கொலைஇதையடுத்து போலீசார் அங்கு சென்று இறந்தவர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். இதில், அவர் காணாமல் போன வினோத் என்பது தெரியவந்தது. அவர் விஷ ஊசிபோட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்ததாக மாகிம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மிலிந்த் இடேக்கர் கூறினார். வேலையில் இருந்து நீக்கப்பட்ட விரக்தியில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
போலீசார் வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.