ஒரே மோட்டார்சைக்கிளில் 3 பேர் பயணம்: வேன் மோதி வாலிபர் பலி


ஒரே மோட்டார்சைக்கிளில் 3 பேர் பயணம்: வேன் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 23 Dec 2017 3:26 AM IST (Updated: 23 Dec 2017 3:26 AM IST)
t-max-icont-min-icon

ஒரே மோட்டார்சைக்கிளில் 3 பேர் வந்த போது வேன் மோதியது. இதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆட்டையாம்பட்டி,

ஆட்டையாம்பட்டி சின்னத்தம்பி வீதியை சேர்ந்தவர் ஹரிகரன்(வயது20). பிளம்பர் வேலை செய்து வந்தார். இதே பகுதியை சேர்ந்தவர்கள் யுவராஜ்(24), மோகன்(24). நண்பர்களான இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார்சைக்கிளில் நேற்று முன்தினம் சேலத்தில் இருந்து ஆட்டையாம்பட்டிக்கு வந்து கொண்டு இருந்தனர். மோட்டார்சைக்கிளை ஹரிகரன் ஓட்டினார்.

வழியில் வீரபாண்டி ரேஷன் கடை அருகே வந்து கொண்டு இருந்தபோது ஆட்டையாம்பட்டியில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டு இருந்த வேன் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அதையொட்டி அவர்கள் சேலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி ஹரிகரன் நேற்று பரிதாபமாக இறந்து விட்டார். யுவராஜ், மோகன் ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விபத்து குறித்து ஆட்டையாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story