100 நாள் வேலைதிட்ட பணியாளர்கள் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.யிடம் முறையீடு


100 நாள் வேலைதிட்ட பணியாளர்கள் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.யிடம் முறையீடு
x
தினத்தந்தி 31 Dec 2017 10:15 PM GMT (Updated: 2018-01-01T01:54:18+05:30)

ராஜபாளையம் அருகே பெண்கள் கால்நடை மருத்துவமனை அமைக்கும் இடத்தில் கழிப்பறை கட்டி தரக் கோரி கோரிக்கை வைத்தனர்.

ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் ஊராட்சி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு கீழ்புறம் முதலியார் தெருவில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து புதியதாக கழிப்பறை கட்ட ரூ.7லட்சம் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது, அதன் பணி தற்போது நிறைவடைந்தது பொதுமக்கள் பயன்பாட்டிற்காக எஸ்.தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

 மேலும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் ஏழை பொதுமக்களுக்கு 3மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என புகார் கூறினார்கள். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். உடன் பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், ஒன்றிய செயலாளர் தங்கச்சாமி, பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊராட்சி செயலாளர் ராஜகோபால் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும், ராஜபாளையம் அருகே சுந்தரநாச்சியார்புரம் ஊராட்சியில் பெண்கள் கால்நடை மருத்துவமனை அமைக்கும் இடத்தில் கழிப்பறை கட்டி தரக் கோரி கோரிக்கை வைத்தனர்.

தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ நோஜீல் சென்று ஆய்வு செய்து வட்டார வளர்ச்சி அலுவர் வான்மதியை தொடர்பு கொண்டு நோஜீல் வரவழைத்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியும், பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியாஜீடம் பேசியும், சட்டமன்ற நீதியிலிருந்தும், மாவட்ட ஆட்சியர் நீதியிலிருந்தும் விரைவில் கழிப்பறை கட்டி தரப்படும் மேலும் தண்ணீர் பிரச்சனைக்கு போர்வெல் அமைக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும் இப்பகுதிக்கு கால்நடை மருத்துவமனை வேண்டாம் என பொதுமக்கள் கூறியவீதை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார்.


Next Story