தமிழக அரசை கண்டித்து 10-ந் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்காத தமிழக அரசை கண்டித்து வருகிற 10-ந் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
நெல்லை,
தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நெல்லையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசியல் களம் விறு, விறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை வரவேற்கிறேன். பல ஆண்டுகளாக இருந்த கேள்விக்கு ஒரு பதில் கிடைத்துள்ளது. ரஜினிகாந்த், ஊழலற்ற ஆட்சி வேண்டும் என்கிறார். இந்த கருத்தை நாங்கள் வரவேற்கிறோம். தொடர்ந்து ரஜினிகாந்த் செயல்பாட்டை பார்த்து நாங்கள் கருத்து தெரிவிப்போம்.
தற்போது தமிழகத்தில் ஊழல் புரையோடி கிடக்கிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றுள்ளார். இது போன்ற ஊழல்களை தமிழகத்தில் தலை எடுக்க விடக்கூடாது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் பாரதீய ஜனதா கட்சிக்கு பின்னடைவாக கருதவில்லை. மக்கள் பிரச்சினைக்காக எங்கள் கட்சி தொடர்ந்து போராடும்.
மத்திய அரசு ஏராளமான திட்டங்களை தமிழகத்துக்கு அறிவித்துள்ளது. இந்த திட்டங்களை முறையாக மாநில அரசு பயன்படுத்தவில்லை. உதாரணமாக ‘ஸ்மார்ட் சிட்டி‘ திட்டத்துக்கு ரூ.116 கோடி ஒதுக்கியுள்ளது. அதில் சில லட்சங்களை கூட தமிழக அரசு செயல்படுத்தவில்லை. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
நெல்லை மாவட்டத்தில் நம்பியாறு, கருமேனியாறு, தாமிரபரணி திட்டத்துக்கு இரண்டாம் கட்டமாக ரூ.890 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது. இந்த நிதியை தமிழக அரசு முறையாக பயன்படுத்த வேண்டும்.
பல மாவட்டங்களில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. மத்திய அரசு தேவையான நிதியை ஒதுக்கியும், மாநில அரசு விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க முயற்சி செய்யவில்லை. பயிர் காப்பீட்டு தொகை வழங்காத மாநில அரசை கண்டித்து எங்கள் கட்சி சார்பில் வருகிற 10-ந் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பாரதீய ஜனதாவின் கிளை கட்சியாக அ.தி.மு.க. செயல்படுகிறது என்று கூறியுள்ளார். இந்த கருத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். பா.ஜனதா வேறு, அ.தி.மு.க. வேறு. தமிழக அரசை கண்டித்து நாங்கள் பல போராட்டங்கள் நடத்தி இருக்கிறோம். அப்படியிருக்கும்போது அ.தி.மு.க.வை, பாரதீய ஜனதாவின் கிளை கட்சி என்று எப்படி சொல்ல முடியும்?.
அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் உள்கட்சி பிரச்சினையை நிறுத்தி விட்டு, மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும். பாரதீய ஜனதா கட்சியை மதவாத கட்சி என்று சிலர் கூறி வருகிறார்கள். அது மிகவும் தவறானது. எங்கள் கட்சியில் அனைத்து சமுதாயத்தினருக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேரில் பார்வையிட்டார். அந்த மாவட்டத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. மக்களுக்கு தேவையான திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. பாரதீய ஜனதா கட்சியை பொறுத்தவரையில் நாளுக்கு நாள் தமிழகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராகி விட்டோம். சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story