காஞ்சீபுரம் அருகே மணல் கடத்தல்; 2 லாரிகள் சிக்கின


காஞ்சீபுரம் அருகே மணல் கடத்தல்; 2 லாரிகள் சிக்கின
x
தினத்தந்தி 31 Dec 2017 10:05 PM GMT (Updated: 2018-01-01T03:35:27+05:30)

காஞ்சீபுரத்தை அடுத்த புரிசை பகுதியில் காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த புரிசை பகுதியில் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அரசு அனுமதியின்றி மணல் கடத்தியது தெரிய வந்தது.

போலீசாரை பார்த்ததும் லாரியின் டிரைவர் மற்றும் கிளீனர்கள் தப்பி ஓடிவிட்டனர். மணல் கடத்தி வந்த 2 லாரிகளையும் போலீசார் கைப்பற்றினர்.


Next Story