திருப்பத்தூர் அருகே பெண் பிணத்துடன் கிராம மக்கள் சாலைமறியல்


திருப்பத்தூர் அருகே பெண் பிணத்துடன் கிராம மக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 2 Jan 2018 3:15 AM IST (Updated: 1 Jan 2018 11:52 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வடக்கு இளைய ஆத்தங்குடியை சேர்ந்தவர் வேலுமணி.

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வடக்கு இளைய ஆத்தங்குடியை சேர்ந்தவர் வேலுமணி. இவரது மனைவி முத்துலட்சுமி( வயது 28). இவர் நேற்று முன்தினம் இறந்தார்.

 இதைதொடர்ந்து அவரது பிணத்தை தெற்கு இளைய ஆத்தங்குடியை சேர்ந்த மயானத்திற்கு நேற்று எடுத்து சென்றனர். ஆனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு பிணத்தை அடக்கம் செய்ய கூடாது. உங்கள் பகுதியிலேயே அடக்கம் செய்து கொள்ளுமாறு கூறினர். இதைதொடர்ந்து முத்துலட்சுமியின் பிணத்தை வடக்கு இளைய ஆத்தங்குடிக்கு கொண்டு வந்தனர். ஆனால் இங்கும் அடக்கம் செய்ய சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வேலுமணியின் உறவினர்கள் மற்றும் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் பிணத்துடன் கீழசெவல்பட்டி ரோட்டில் நேற்று இரவு சாலைமறியலில் ஈடுபட்டனர்.

 இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் சுமதி, துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் ஆகியோர் மறியல் செய்தவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.


Next Story