மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; பொக்லைன் ஆபரேட்டர் சாவு
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; பொக்லைன் ஆபரேட்டர் சாவு
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே அன்னமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ் (வயது 29). பொக்லைன் (ஜே.சி.பி) ஆபரேட்டர். நேற்று இவர், பெரம்பலூரில் இருந்து அன்னமங்கலத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சோமாண்டபுதூர் பாலம் பகுதியில் வந்த போது, எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் எசனையை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் மகேந்திரபூபதி (35) வந்து கொண்டிருந்தார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர்கள் திருச்சியிலுள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே ஏசுதாஸ் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டது. மகேந்திரபூபதிக்கு திருச்சியிலுள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.