சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் நேற்று மார்கழி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சுசீந்திரம்,
குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் பிரசித்தி பெற்ற தாணுமாலயசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டுக்கான மார்கழி திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது.
திருவிழாவையொட்டி தினமும் வாகனபவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை நிகழ்ச்சி, நாதஸ்வர கச்சேரி, பரதநாட்டியம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
9-ம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு கங்காளநாதர் வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகள் வழியே ஊர்வலமாக பவனி வந்தார். அதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது.
காலை 7.45 மணிக்கு அம்பாளுடன் சாமியையும், அறம் வளர்த்த நாயகி அம்மனையும், விநாயகரையும் தனித்தனியாக வாகனங்களில் எழுந்தருளச்செய்து மலர்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க ரதவீதிகள் வழியே பவனி வந்தனர்.
அதை தொடர்ந்து காலை 9.15 மணியளவில் அம்பாளுடன் கூடிய சாமியை பெரிய தேரிலும் (சாமி தேர்), அறம் வளர்த்த நாயகி அம்மனை அம்மன் தேரிலும், விநாயகரை பிள்ளையார் தேரிலும் எழுந்தருளச் செய்தனர். பின்னர் தேரில் சிறப்பு பூஜை நடந்தது. தேரின் வலது பக்க சக்கரத்தில் சந்தனம் தெளித்து மாலை அணிவித்து தீபாராதனை காட்டப்பட்டது. 9.45 மணிக்கு திருத்தேர் வடம் தொட்டு இழுக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் விஜயகுமார் எம்.பி., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை, திருக்கோவில்களின் இணைஆணையர் அன்புமணி, கோட்டாட்சியர் ஜானகி, சிறப்பு தாசில்தார் ஆறுமுகதரன், மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் சகாயம், அ.தி.மு.க. நகர செயலாளர் சந்திரன், கோவில் மேலாளர் வெங்கடேஷ், கணக்கர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முதலில் விநாயகர் தேர் இழுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சாமி தேர், அம்மன் தேர் இழுக்கப்பட்டது. அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வந்தனர்.
தேரோட்டத்தை காண அதிகாலையில் இருந்தே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பம், குடும்பமாக சுசீந்திரத்தில் குவியத் தொடங்கினர். இதனால், கோவிலை சுற்றிலும் 4 ரதவீதிகளிலும் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் வெள்ளமாகவே காட்சி அளித்தது.
ஏராளமானவர்கள் பஸ், கார், வேன் போன்ற வாகனங்களில் கோவிலுக்கு வந்தனர். இதனால், வாகனங்களை நிறுத்துவதற்கு பெரிதும் நெருக்கடியாக இருந்தது. வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக போலீசார் சுசீந்திரம் புறவழிச்சாலையில் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
தேர் திருவிழாவை காண வந்த பக்தர்களுக்கு வசதியாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தேரோட்டம் நடந்த ரத வீதிகளில் பக்தர்களுக்கு மோர், தயிர், சர்பத், தண்ணீர் போன்றவற்றை பல்வேறு அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டன.
புதுமண தம்பதிகள் தேர் திருவிழாவில் தாணுமாலயசாமியை தரிசிப்பது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் ஏராளமான புதுமணத் தம்பதிகள் தேரோட்ட விழாவில் கலந்து கொண்டனர். மக்கள் வெள்ளத்தில் 4 ரதவீதிகளிலும் பவனி வந்த தேர் சரியாக 12.50 மணிக்கு நிலைக்கு வந்தது. தேரோட்டத்தை தொடர்ந்து மாலையில் சமய சொற்பொழிவும், இசை நிகழ்ச்சியும், இரவு சாமி ரிஷப வாகனத்தில் திருவீதி உலா வருதலும், தொடர்ந்து மெல்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நேற்று நள்ளிரவு ரிஷப வாகனத்தில் தாணுமாலயசாமியும், அன்னவாகனத்தில் அறம் வளர்த்த நாயகியும், கருட வாகனத்தில் திருவேங்கட விண்ணகர பெருமாளும் வீதிஉலா வந்து திருக்கோவில் வாசலுக்கு வந்தனர். அப்போது, கோட்டார் ஏழகரம் வலம்புரி விநாயகரும், மருங்கூர் சுப்பிரமணியசாமியும், வேளிமலை சுப்பிரமணியசாமியும் எதிரெதிரே காட்சி அளிக்க சாமிக்கு ஒரே நேரத்தில் தீபாராதனை நடந்தது.
இரு சுப்பிரமணியசாமிகளும், வலம்புரி விநாயகரும், தாணுமாலயசாமியை சுற்றி வலம் வந்து எதிரே நிற்க தாணுமாலயசாமி அவர்களை விட்டு பிரிய மனம் இன்றி கோவில் முகப்பில் இருந்து கோவிலுக்குள் முன்னும் பின்னுமாக அசைந்து செல்வதும், பின்னர் திரும்பி வருவதுமாக பலமுறை நடந்தது. இந்த காட்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். பெண்கள் குலவையிட்டு மங்கல ஒலி எழுப்பினர்.
பின்னர், தாணுமாலயசாமி மற்றும் அம்மன், பெருமாள் சாமிகள் கோவிலுக்குள் சென்றனர். விநாயகர் மற்றும் சுப்பிரமணிய சாமிகள் அவரவர் ஊர் நோக்கி புறப்பட்டு சென்றனர். இந்த நிகழ்ச்சியே ‘சப்தாவர்ணம்’ ஆகும்.
சப்தாவர்ணம் தொழுதால் மோட்சம் என்பது பழமொழி. ‘சப்தம்’ என்பது ‘ஏழு’ என்ற பொருள். மும்மூர்த்திகள் முன்னும் பின்னும் 7 முறை சென்று வருவதால் சப்தாவர்ணம் பெயர் வரப்பெற்றது.
நள்ளிரவில் சப்தா வர்ண காட்சியை கண்டு களித்த பக்தர்கள் இரவில் கோவிலில் தங்கி மறுநாள் அதிகாலை ஆரூத்ரா தரிசனத்தை கண்டுகளித்து தாணுமாலயசாமியை தரிசனம் செய்து சென்றனர்.
தேரோட்டம் மற்றும் சப்தா வர்ண நிகழ்ச்சியையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பெண் போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விழாக்களில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், ம.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், பா.ஜனதா மாவட்ட துணைத்தலைவர் முருகேஷ், குத்தகைதாரர்கள் கணேசன், வடிவேல் முருகன், பகவதியப்பன், மூர்த்தி, அ.தி.மு.க. மேலவை பிரதிநிதி பொன்ராஜ், ராஜலிங்கம், சுசீந்திரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சுப்பிரமணியபிள்ளை, முன்னாள் துணைத்தலைவர் கதிரேசன், தேரூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் முத்து, ஒப்பந்தகாரர்கள் கண்ணன், மோகன்தாஸ், மயிலாடி பேரூராட்சி முன்னாள் தலைவர் சாய்ராம், எஸ்.எம். எஸ்.எம். பள்ளி நிர்வாகிகள், திருக்கோவில் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகமும், பக்தர் சங்கத்தினரும், ஊர் பொதுமக்களும் இணைந்து செய்திருந்தனர்.

Related Tags :
Next Story