மோட்டார் சைக்கிள்- பஸ் மோதல்: சப்-இன்ஸ்பெக்டர் பலி


மோட்டார் சைக்கிள்- பஸ் மோதல்: சப்-இன்ஸ்பெக்டர் பலி
x
தினத்தந்தி 2 Jan 2018 4:30 AM IST (Updated: 2 Jan 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரசு பஸ் மோதி இறந்தார்.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலம்பள்ளம் வாடியக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது56). திருச்சிற்றம்பலம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த இவர், பட்டுக்கோட்டை பொன்னவராயன்கோட்டையில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கோவிந்தராஜ் நேற்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டு மோட்டார்சைக்கிளில் திருச்சிற்றம்பலம் போலீஸ் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார். பட்டுக்கோட்டை அருகே குறிச்சி பூங்கா பகுதியில் ஒரு வளைவில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அரசு பஸ் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

பலி

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோவிந்தராஜின் மனைவி தமிழ்ச்செல்வி (46) வாட்டாத்திக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவிந்தராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. கோவிந்தராஜுக்கு அபிநயா (21) என்ற மகளும், விஷால் (19) என்ற மகனும் உள்ளனர். புத்தாண்டு தினத்தன்று போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story