ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கர்நாடக அரசு அதிரடி உத்தரவு


ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கர்நாடக அரசு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 2 Jan 2018 3:49 AM IST (Updated: 2 Jan 2018 3:49 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 30–க்கும் அதிகமான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கிய கர்நாடக அரசு, 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அதிரடியாக பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் பணியாற்றி வரும் 30–க்கும் அதிகமான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில் பதவி உயர்வு பெற்ற 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மற்ற அதிகாரிகள் பதவி உயர்வு பெற்று தாங்கள் பணியாற்றி வரும் துறைகளிலேயே பணியாற்றி வருகிறார்கள். பதவி உயர்வு பெற்று பணி இடமாற்றம் அடைந்துள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் விவரங்கள் வருமாறு:–

பிரசாத் குமார் மிஸ்ரா

* கொப்பல் கூடுதல் கலெக்டராக பணியாற்றிய குருதத் ஹெக்டே, சிக்பள்ளாப்பூர் மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* பாகல்கோட்டை கிருஷ்ணா மேலணை திட்டத்தின் பொது மேலாளராக செயல்பட்ட நளினி அதுல், கர்நாடக நகர உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிதி கழக இணை நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டு உள்ளார்.

* பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டே உதவி கலெக்டராக பணியாற்றிய பிரசாத் குமார் மிஸ்ரா, குடகு மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரியாக செயல்படுவார்.

* ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசூகூர் உதவி கலெக்டராக பணி செய்த திவ்யா பிரபு, பல்லாரி மாநகராட்சி கமி‌ஷனராக பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

ரகுநந்தன் மூர்த்தி

* உடுப்பி மாவட்டம் குந்தாபுரா உதவி கலெக்டராக செயல்பட்ட ஷில்பா நாக், ஹாவேரி மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

* தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் உதவி கலெக்டராக பொறுப்பு வகித்த ரகுநந்தன் மூர்த்தி, கலபுரகி மாநகராட்சி கமி‌ஷனராக செயல்படுவார்.

* உத்தர கன்னடா மாவட்டம் கார்வார் உதவி கலெக்டராக பணியாற்றிய கார்கி ஜெயின், பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டே துணை கலெக்டராக பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

* கலபுரகி மாவட்டம் சேடம் உதவி கலெக்டராக இருந்த சுசிலா, கலபுரகி துணை கலெக்டராக பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

மேற்கண்ட தகவல் கர்நாடக அரசு பிறப்பித்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story