ரூ.1.33 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் நேரில் ஆய்வு


ரூ.1.33 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 3 Jan 2018 4:15 AM IST (Updated: 3 Jan 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

மோகனூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் ரூ.1.33 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மோகனூர்,

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அணியாபுரம் ஊராட்சியில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா மற்றும் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அம்மா உடற்பயிற்சி கூடம் ஆகியவை கட்டப்பட்டு வருகிறது. இதே ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டப்படுகிறது.

தோளுர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை திட்ட மண்புழு உரம் தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. கள்ளிப்பாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

இதேபோல் மணப்பள்ளி ஊராட்சியில் மாநில நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் காவிரி ஆற்றில் கிணறு அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மோகனூர் ஒன்றியத்தில் எஸ்.வாழவந்தி, பெரமாண்டாம் பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில் மொத்தம் ரூ.1 கோடியே 32 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அனைத்து பணிகளையும் தாமதமின்றி குறிப்பிட்ட கால அளவிற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மாலதி, மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயக்குமார், தேன்மொழி, ஒன்றிய பொறியாளர் சுமதி, உதவி பொறியாளர் கல்பனா, பணி மேற்பார்வையாளர்கள் கார்த்திகேயன், ராஜேஸ், மதேஸ்வரன் உட்பட மோகனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story