மயானத்தில் அனுமதியின்றி மண் அள்ளப்படுவதால் இறந்தவர்களின் எலும்புக்கூடுகள் வெளியே தெரியும் அவலம்
வேடசந்தூர் அருகே உள்ள இ.சித்தூர் ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 60–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
வேடசந்தூர்,
வேடசந்தூர் அருகே உள்ள இ.சித்தூர் ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 60–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியை சேர்ந்தவர்கள், இறந்தவர்களின் உடலை ஊருக்கு அருகே கொடிக்காபட்டி முதல் இ.சித்தூர் வரை வரும் ஓடை அருகே உள்ள மயானத்தில் புதைத்து வருகிறார்கள். இந்த இடத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இறந்தவர்களின் உடல்களை புதைத்து வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அனுமதியின்றி ஓடையின் அருகே உள்ள சுடுகாடு பகுதிகளில் இரவு, பகலாக மண் அள்ளப்பட்டு வருகிறது. இறந்தவர்களின் எலும்புக்கூடுகள் வெளியே தெரியும்அளவுக்கு மண் அள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மயானத்தில் அனுமதியின்றி மண் அள்ளுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.