டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கும்
திருச்செந்தூரில், பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று மதியம் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர், கோவிலில் இடிக்கப்பட்ட கிரிப்பிரகார மண்டபம் மற்றும் கோவில் வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருச்செந்தூர் கோவிலில் கிரிப்பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததை தொடர்ந்து கோவில் வளாகத்தில் கட்டிடங்களின் தன்மைகளை ஆராய்ந்து அகற்றப்பட்டு வருகிறது. கட்டிடங்களை அகற்றும்போது வியாபாரிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக கடைகள் அகற்றப்பட்டன.
இந்த கடைகளுக்கு பதிலாக பக்தர்கள், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் வேறு இடத்தில் கடைகள் ஒதுக்கி தரப்படும்.
கோவிலில் கிரிப்பிரகார மண்டபத்தை முழுவதும் அகற்றியவுடன், கல் மண்டபமாக கட்டுவதற்கு உபயதாரர்கள் தயாராக இருக்கின்றனர்.
மறைந்த ‘பத்மஸ்ரீ’ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் கட்டப்படும் என்று தூத்துக்குடியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
திருச்செந்தூரில் மணிமண்டபம் கட்டப்படும் இடத்தை தேர்வு செய்ய வருவாய் துறை அதிகாரிகள் மூலம் விரைவில் ஆய்வு செய்ய உள்ளோம். மணிமண்டபம் கட்டுவதற்கு விரைவில் அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story