கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போதைப்பொருள் விற்ற கானா நாட்டவருக்கு 2 ஆண்டுகள் சிறை


கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போதைப்பொருள் விற்ற கானா நாட்டவருக்கு 2 ஆண்டுகள் சிறை
x
தினத்தந்தி 3 Jan 2018 2:30 AM IST (Updated: 3 Jan 2018 2:10 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போதைப்பொருள் விற்ற கானா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டது.

மங்களூரு,

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போதைப்பொருள் விற்ற கானா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டது.

கானா நாட்டை சேர்ந்தவர்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு மாநகர குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு(2017) பைந்தூர்வெல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கானா நாட்டைச் சேர்ந்த சிக்கோசி பிரான்சிஸ் கிறிஸ்டோபர்(வயது 37) என்பதும், அவர் சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்ததும் தெரியவந்தது.

மேலும் அவர் விசா காலம் முடிந்து இந்தியாவில் சட்டவிரோதமாக இருந்து வந்ததும், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை விற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள ‘கொகைன்’ எனும் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து கத்ரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சிக்கோசி மீது மங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

2 ஆண்டுகள் சிறை

வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். அவர் வழக்கில் குற்றவாளியான சிக்கோசிக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து போலீசார் சிக்கோசியை கைது செய்து மங்களூரு மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story