உரக்கிடங்கு அமைக்கும் பகுதிகளை கீதாஜீவன் எம்.எல்.ஏ. ஆய்வு


உரக்கிடங்கு அமைக்கும் பகுதிகளை கீதாஜீவன் எம்.எல்.ஏ. ஆய்வு
x
தினத்தந்தி 3 Jan 2018 3:00 AM IST (Updated: 3 Jan 2018 2:11 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் உரக்கிடங்கு அமைக்கும் பகுதிகளை கீதாஜீவன் எம்.எல்.ஏ. நேற்று ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்து உரமாக மாற்றுவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் 13 இடங்களில் உரக்கிடங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் குடியிருப்புகளுக்கு இடையே அமைக்கப்பட்டு வரும் உரக்கிடங்குகளுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. நேற்று காலை உரக்கிடங்கு அமைக்கப்படும் பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அவர் அண்ணாநகர் 12–வது தெரு, 3–வது மைல், கணேஷ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது, குடியிருப்புக்கு நடுவில் அமைக்கப்பட்டு வரும் உரக்கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து, மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் உரக்கிடங்கு அமைக்காமல், வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அப்போது, தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், வட்ட செயலாளர்கள் சுரேஷ், சுந்தரவேல், சிங்கராஜ், முன்னாள் கவுன்சிலர் இசக்கிமுத்து உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story