தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்


தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்
x
தினத்தந்தி 3 Jan 2018 4:15 AM IST (Updated: 3 Jan 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் திரளான பக்தர்கள் தரிசனம்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் திருவாதிரை திருவிழாவும் முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் திருவாதிரை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழா நேற்று நடந்தது.

விழாவையொட்டி நேற்று அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தல் நடந்தது. 3 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. காலை 6–15 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடந்தது. பின்னர் பசு தீபாராதனை, நடன தீபாராதனை நடந்தது. விழாவில் கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் தலைமையில் சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டன. விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி அஜித் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


Next Story