கல்லூரி உதவி பேராசிரியர் தகுதித் தேர்வு


கல்லூரி உதவி பேராசிரியர் தகுதித் தேர்வு
x
தினத்தந்தி 3 Jan 2018 2:15 PM IST (Updated: 3 Jan 2018 1:31 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஏற்படும் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் டேன்செட் (TNSET) எனப்படும் தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது.

முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

கொடைக்கானல் அன்னை தெரசா பெண்கள் பல்கலைக்கழகம் மூலமாக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது 2018-ம் ஆண்டுக்கான உதவிப் பேராசிரியர் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. 4-3-2018 அன்று இதற்கான தேர்வு நடத்தப் படுகிறது. மொத்தம் 26 பாடத் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடக்க உள்ளது. 11 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறும்.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களுக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.

கல்வித்தகுதி:

வேதி அறிவியல், வணிகம், கணினி அறிவியல் மற்றும் அப்ளிகேசன், பொருளாதாரம், கல்வி, எலக்ட்ரானிக்ஸ், ஆங்கிலம், ஜியோ கிராபி, இந்தி, வரலாறு, ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேசன், சட்டம், சான்ஸ்கிரிட், நிர்வாகவியல், தமிழ், தெலுங்கு, சமூகவியல், உளவியல், அரசியல் அறிவியல், உடற்கல்வி அறிவியல், நூலக அறிவியல், புவி அறிவியல் உள்ளிட்ட 26 பாடத்துறைகளில் முதுநிலைப்படிப்பு அல்லது முதுநிலை படிப்புடன் பிஎச்.டி. ஆய்வுப் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம் :

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.1500 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.500 கட்டணமும், ஓ.பி.சி. நான் கிரீமிலேயர் பிரிவினர் ரூ.1250-ம் கட்டணமும் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் சென்று முழுமையான விவரங்கள் படித்து அறிந்து கொண்டு விண்ணப்பிக்கத் தொடங்கவும். தேவையான இடத்தில் புகைப்படம் மற்றும் கையொப்பம் மற்றும் அவசியமான சான்றுகள் நகல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க 9-2-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

இது பற்றிய விரிவான விவரத்தை www.tnsetexam2018mtwu.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

Next Story