மாணவர்கள் தயாரித்த அப்ளிகேசன்கள்
காரக்பூரில் செயல்படும் ஐ.ஐ.டி. நிறுவனம் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் 2 அப்ளிகேசன்களை உருவாக்கி உள்ளது.
மாற்றுத் திறனாளிகள் அன்றாட நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இது உருவாக்கப்பட்டிருப்பதால் இதன் பயன்பாடு போற்றப்படுகிறது. ஆகாஸ் பானி (Akash baani) மற்றும் சான்யாக் (Sanyog) போன்றவை இவர்கள் உருவாக்கி உள்ள அப்ளிகேசன்களாகும்.
படங்களை தொடுவதன் மூலம் இதில் பல்வேறு செயல்களுக்கான கட்டளைகளை கொடுக்க முடியும். மூளைவளர்ச்சி குறைவுடைய ஒருவர் இந்த அப்ளிகேசனை எளிமையாக பயன்படுத்தலாம். உதாரணமாக டி.வி. பார்க்க விரும்புவதாக அவர் சொல்ல வேண்டுமானால் சான்யாக் அப்ளிகேசனில், டி.வி. படத்தையும், கண் படத்தையும் தொட்டால் போதும். அதற்கான வாக்கியம் உருவாக்கப்பட்டுவிடும். அது உச்சரிப்பாகவும் ஒலிக்கும்.
இதேபோல காய்கறி வாங்கச் செல்லும்போது காய்கறியின் படத்தையும், எண்ணிக்கையை குறிக்கும் எழுத்தையும் தொட்டால் அது ஆர்டராக ஒலித்துவிடும். இதை ஆகாஷ் பானி அப்ளிகேசனில் செயல்படுத்தலாம். ஆகாஷ்பானி 2 ஆண்டு முயற்சியிலும், சான்யாக் அப்ளிகேசன் 4 ஆண்டு முயற்சியிலும் உருவாக்கப்பட்டது. இது ஜனாதிபதி மாளிகையிலும் பார்வைக்கு வைக்கப்பட்டது. இப்போதைய நிலையில் இது கட்டணம் செலுத்திப் பெறும் அப்ளிகேசன்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story