ஜே.இ.இ. தேர்வுக்கான வீடியோ வெளியீடு
ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி. போன்ற மத்திய அரசின் முக்கியமான தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் என்ஜினீயரிங்- தொழில்நுட்ப பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வாக ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்சாம் (ஜே.இ.இ.) தேர்வு 2012 முதல் நடத்தப்பட்டு வருகிறது.
2013-முதல் ஜே.இ.இ. மெயின் தேர்வு, ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு என இரு தேர்வுகளாக இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவ படிப்பில் சேர்வதற்கு ‘நீட்’ தேர்வு கட்டாயமாக்கப்பட்டிருப்பதுபோல, என்ஜினீயரிங்கில் சேர்வதற்கும் ஜே.இ.இ. தேர்வை அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும் பொதுவான தேர்வாக கொண்டு வரலாமா? என்ற யோசனை மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. எனவே போட்டித் தேர்வுக்குத் தயாராகுபவர்கள் போல, என்ஜினீயரிங் படிப்பில் சேர்வதற்கும் ஜே.இ.இ. தேர்வுக்கு பயிற்சி பெறும் எண்ணம் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. இதை முன்னிலைப்படுத்தி தனியார் பயிற்சி மையங்களும் பாடங்களை நடத்தத் தொடங்கியிருக்கின்றன.
இந்த ஆண்டுக்கான ஜே.இ.இ. மெயின் தேர்வு வருகிற மே மாதம் 20-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஜே.இ.இ. தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு உதவும் வகையில் கான்பூர் ஐ.ஐ.டி. நிறுவனம் இந்த தேர்வை எதிர்கொள்ளும் வீடியோ என்றை வெளியிட்டு உள்ளது. jeeadv.ac.in என்ற இணைய பக்கத்தில் இந்த வீடியோ பதிவு இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இதை பார்த்து பயன் பெறலாம்.

Related Tags :
Next Story