உலோக கலவைகள்


உலோக கலவைகள்
x
தினத்தந்தி 3 Jan 2018 4:15 PM IST (Updated: 3 Jan 2018 2:43 PM IST)
t-max-icont-min-icon

நாம் இன்று பயன்படுத்தும் பெரும்பாலான பொருள்கள் பல்வேறு உலோகங்களின் கலவையாகும்.

 உதாரணமாக பித்தளை என்பது தனியொரு பொருளல்ல. அது தாமிரம், துத்தநாகம் இவற்றின் கலவையால் கிடைத்ததாகும். இதுபோல சில முக்கிய உலோக கலவைகளை அறிவோம்...

* தாமிரம், வெள்ளயம், இவற்றின் கலவையே வெண்கலம்

* இரும்பு, குரோமியம், நிக்கல்- துருப்பிடிக்காத எக்கு

* ஜெர்மன் சில்வர் என்பது தாமிரம், துத்தநாகம், நிக்கல் ஆகியவற்றின் கலவை.

* தங்கம்-வெள்ளி இவற்றின் கலவை எலக்ட்ரம்

* வெள்ளைத் தங்கம் என்பது தங்கத்துடன் நிக்கல் அல்லது பெல்லேடியம் சேர்ந்த கலவை.

* நீலத்தங்கம் என்பது தங்கத்துடன், இரும்பு சேர்ந்த கலவை.

* பர்பிள் தங்கம் என்பது தங்கத்துடன் அலுமினியம் சேர்ந்த கலவை.

* ரசக்கலவை என்பது பாதரச, உலோகக் கலவை.

* வெள்ளி ரசக்கலவை பல் இடைவெளியை அடைக்கப் பயன்படுகிறது.

* அலுமினியம், மக்னீசியக் கலவை டியூராலுமின். இது விமான பாகங்கள் செய்ய பயன்படுகிறது.

* நிக்கல் குரோமியம் சேர்ந்தது நிக்ரோம். எலக்ட்ரிக் அயன்பாக்சில் பயன்படுவது இந்த உலோக கலவை.

* வெப்பத்தால் விரிவடையாத உலோகக் கலவை இன்வார். இது தனி ஊசல்கள் செய்யப் பயன்படுகிறது.

* ஜெர்மன் சில்பர் என்ற உலோகக் கலவையில் வெள்ளி கிடையாது.

Next Story