பஸ் மீது மோட்டார்சைக்கிள் மோதி கூலித்தொழிலாளி பலி நண்பர் படுகாயம்
கிருஷ்ணகிரியில் அரசு பஸ் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி பலியானார். உடன் சென்ற நண்பர் படுகாயம் அடைந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே உள்ள கார்வேபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ஜீவித் (வயது 19), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை தனது மோட்டார்சைக்கிளில் நண்பர் சிரஞ்சீவி (18) என்பவரை அழைத்து கொண்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
அவர்கள் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மேல்சோமார் பேட்டை அருகே சென்ற போது முன்னால் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த நேரம் திடீரென்று டிரைவர் பிரேக் பிடித்து பஸ்சை நிறுத்தியதாக தெரிகிறது. அப்போது ஜீவித்தின் மோட்டார்சைக்கிள் பஸ்சின் பின்புறமாக மோதியது.
வாலிபர் பலி
இந்த விபத்தில் ஜீவித்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடன் சென்ற சிரஞ்சீவி படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணி விபத்து நடந்த இடத்திற்கு சென்று பலியான ஜீவித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story