சங்கரன்கோவில் அருகே கிணற்றில் பச்சிளம் குழந்தை சடலமாக மிதந்ததால் பரபரப்பு
சங்கரன்கோவில் அருகே, கிணற்றில் பச்சிளம் குழந்தை சடலமாக மிதந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிணற்றில் குழந்தையின் சடலம் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள இருமன்குளத்தை கிராமத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன், விவசாயி. இவருக்கு சொந்தம
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவில் அருகே, கிணற்றில் பச்சிளம் குழந்தை சடலமாக மிதந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கிணற்றில் குழந்தையின் சடலம்நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள இருமன்குளத்தை கிராமத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன், விவசாயி. இவருக்கு சொந்தமான கிணறு அப்பகுதியில் உள்ளது. நேற்று காலை சிவசுப்பிரமணியன் கிணற்றுக்கு சென்றார்.
அங்கு கிணற்று தண்ணீரில், பச்சிளம் குழந்தையின் சடலம் தலைகுப்புற கவிழ்ந்தடி மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி உடனடியாக வடக்குப்புதூர் கிராம நிர்வாக அலுவலர் பவானிக்கு தகவல் கொடுத்தார். அவர் இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசில் புகார் செய்தார்.
கள்ளக்காதலில் பிறந்ததா?அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் இதுபற்றிய தகவலின் பேரில் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்தினரும் வந்தனர். கிணற்றுக்குள் இறங்கி, தண்ணீரில் மிதந்த குழந்தையின் சடலத்தை கைப்பற்றி கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த குழந்தையின் சடலத்தை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த குழந்தை பெண் குழந்தையாகும். பிறந்து 3 நாட்கள் ஆகியிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். கள்ளக்காதலில் பிறந்த குழந்தையா, அந்த குழந்தையை வீசிச் சென்றவர்கள் யார் எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.