வார்டு எல்லை மறுவரையறை கண்டித்து சிக்கல் ஊராட்சி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


வார்டு எல்லை மறுவரையறை கண்டித்து சிக்கல் ஊராட்சி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Jan 2018 3:00 AM IST (Updated: 4 Jan 2018 12:32 AM IST)
t-max-icont-min-icon

சாயல்குடி அருகே உள்ள சிக்கல் ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன.

சாயல்குடி,

சாயல்குடி அருகே உள்ள சிக்கல் ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இவற்றில் 1 மற்றும் 2–வது வார்டுகளை சிக்கல் ஊராட்சியில் இருந்து நீக்கிவிட்டு கொத்தங்குளம் ஊராட்சியுடன் இணைத்து வார்டு எல்லை மறுவரையறை உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டுஉள்ளது. சிக்கல் கிராமத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரமுள்ள கொத்தங்குளம் ஊராட்சியில் இந்த 2 வார்டுகளையும் இணைப்பதால் பல்வேறு சிரமங்கள் ஏற்படும் என்பதால் மீண்டும் இந்த இரு வார்டுகளையும் முன்புபோல் சிக்கல் ஊராட்சியிலேயே தொடர திருத்தம் செய்து வெளியிட வலியுறுத்தியும் மறுவரையறையை கண்டித்தும் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிக்கல் முஸ்லிம் ஜமாத் தலைவர் ஆரிப்முகமது தலைமை தாங்கினார். மேலச்சிக்கல் முஸ்லிம் ஜமாத் தலைவர் காதர் சுல்தான், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் பாகீர்அலி, சிக்கல் முன்னாள் ஊராட்சி தலைவர் சிவன், சாயல்குடி ஒன்றிய அ.தி.மு.க. சிறுபாண்மை பிரிவு செயலாளர் அப்துல் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிக்கல், தொட்டியபட்டி, பொட்டல்பச்சேரி, மதினாநகர், ஆண்டிச்சிகுளம், கழனீர் மங்களம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Next Story