வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள்: சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை


வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள்: சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 4 Jan 2018 2:30 AM IST (Updated: 4 Jan 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு பாளையங்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நெல்லை,

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு பாளையங்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பிறந்த நாள் விழா

ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டு வீர மரணம் அடைந்த வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாளையங்கோட்டை பஸ்நிலையம் எதிரே உள்ள கட்டபொம்மன் சிலை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்த சிலைக்கு அனைத்து கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அ.தி.மு.க. சார்பில் பாளையங்கோட்டை பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

காங்கிரஸ்– ம.தி.மு.க.

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.எம்.சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ம.தி.மு.க. சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமையில் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் புறநகர் மாவட்ட செயலாளர் தி.மு.ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

த.மா.கா.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நெல்லை மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகன் தலைமையில் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நெல்லை சந்திப்பு நாயுடு சமுதாய நலச்சங்க தலைவர் நம்பிராஜன் தலைமையில் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் செயலாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வீரபாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளை சார்பில் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கட்டபொம்மன் அறக்கட்டளை தலைவர் நாகராஜன், பூலோக பாண்டியன், வாசுதேவநல்லூர் வட்டார காங்கிரஸ் தலைவர் முருகன், அறக்கட்டளை செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story