லிங்காயத்துக்கு தனி மத அங்கீகாரம் வழங்க கோரும் விவகாரம் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமையாக உள்ளனர் எடியூரப்பா பேட்டி
லிங்காயத்துக்கு தனி மத அங்கீகாரம் கோரும் விவகாரத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமையாக உள்ளனர் என்று எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு,
லிங்காயத்துக்கு தனி மத அங்கீகாரம் கோரும் விவகாரத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமையாக உள்ளனர் என்று எடியூரப்பா கூறினார்.
தனி மத அங்கீகாரம்லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் வழங்குமாறு எம்.பி.பட்டீல் உள்பட மந்திரிகள் சிலரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த பசவராஜ் ஹொரட்டி எம்.எல்.சி.யும் கோரிக்கை விடுத்து இருக்கிறா£கள். வீரசைவ சமூகத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். வீரசைவ மற்றும் லிங்காயத் ஒரே சமூகம் தான் என்று வீரசைவ சமூகத்தினர் சொல்கிறார்கள்.
வீரசைவம் மற்றும் லிங்காயத் இரண்டும் வெவ்வேறு சமூகங்கள் என்று எம்.பி.பட்டீல் உள்பட மந்திரிகளும், பசவராஜ் ஹொரட்டியும் சொல்கின்றனர். இருப்பினும் லிங்காயத்துக்கு தனி மத அங்கீகாரம் வழங்குவது குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி நாகமோகன்தாஸ் தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுபற்றி கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா தாவணகெரேயில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
சுயநல நோக்கத்துடன்...லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் வழங்க கோரி மந்திரிகள் சிலர் மற்றும் பசவராஜ் ஹொரட்டி எம்.எல்.சி. ஆகியோர் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த பிரச்சினையில் பசவராஜ் ஹொரட்டி சுயநல நோக்கத்துடன் செயல்படுகிறார். இதற்கு பா.ஜனதாவை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளிப்பதாக அவர் கூறுவது பொய். பசவராஜ் ஹொரட்டிக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்.
உங்களுக்கு தேவைப்பட்டால் அரசியல் செய்யுங்கள். ஆனால் இந்த பிரச்சினையில் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்க வேண்டாம். எங்கள் கட்சியில் தேவை இல்லாமல் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். இந்த பிரச்சினையில் அகில இந்திய வீரசைவ லிங்காயத் மகாசபா மற்றும் சித்தகங்கா மடாதிபதி ஆகியோர் எடுக்கும் முடிவின் பக்கம் நாங்கள் நிற்கிறோம்.
ஒற்றுமையாக உள்ளனர்இது தான் எங்களின் நிலைப்பாடு. எங்கள் சமூகத்தை உடைக்க காங்கிரஸ் அரசு முயற்சி செய்கிறது. ஆனால் இந்த விவகாரத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமையாக உள்ளனர்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.