திருத்தணி முருகன் கோவில் உண்டியல் வசூல் ரூ.36½ லட்சம்
திருத்தணி முருகன் கோவிலில் கடந்த 7 நாட்களில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.36½ லட்சம் செலுத்தி இருந்தனர்.
திருத்தணி,
திருத்தணி முருகன் கோவிலில் கடந்த மாதம் 31-ந் தேதி படிபஜனை திருவிழாவும், கடந்த 1-ந் தேதி ஆங்கில புத்தாண்டு விழாவும் சிறப்பாக நடத்தப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கடந்த 7 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தி இருந்த காணிக்கை எண்ணும் பணி கோவில் தக்கார் ஜெயசங்கர், இணை ஆணையர் சிவாஜி மற்றும் அதிகாரிகள் மேற்பார்வையில் நடந்தது. இதில் பக்தர்கள் ரொக்கமாக ரூ.36 லட்சத்து 46 ஆயிரத்து 277 மற்றும் 78 கிராம் தங்கம், 1 கிலோ 610 கிராம் வெள்ளி போன்றவற்றை காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
காணிக்கை எண்ணிக்கையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story