புனே வன்முறை சம்பவத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர் முதல்–மந்திரி பட்னாவிஸ் பேட்டி
புனே வன்முறை சம்பவத்துக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
மும்பை,
புனே வன்முறை சம்பவத்துக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
வன்முறைபுனேயில் கடந்த திங்கட்கிழமை இரு தரப்பினருக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில், ராகுல் என்ற 28 வயது வாலிபர் பலியானார். இந்த கலவரம் மாநிலம் முழுவதும் பரவியது. இதனால், கடந்த இரண்டு நாட்களாக மராட்டியமே ஸ்தம்பித்தது. புனே கலவரம் குறித்து நீதி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில், முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘புனே வன்முறை சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்து வருகிறோம் சாதி கலவரத்துக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர். இந்த விவகாரம் தர்க்க ரீதியிலான முடிவை எட்டும்’’ என்றார்.
மேலும், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்திய அவர், ஊடகத்தினர் உள்பட சமுதாயத்தின் அனைத்து பிரிவினரும் சாதி மோதல் ஏற்படாத சூழலை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஒற்றுமையுடன் முறியடிப்போம்முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், ‘‘மராட்டியம் எப்போதும் வளர்ச்சி அடைகிற மாநிலம். எனினும், வெளியாட்கள் சிலர் அரசியல் ஆதாயத்துக்காக சாதி, மத மோதல்களை உருவாக்க முயற்சிக்கின்றனர்’’ என்று குற்றம்சாட்டினார். எனவே, இதுபோன்ற முயற்சிகளை நாம் ஒற்றுமையாக இருந்து முறியடிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.