துரு பிடிக்காத ஆலை


துரு பிடிக்காத ஆலை
x
தினத்தந்தி 5 Jan 2018 9:30 AM IST (Updated: 4 Jan 2018 2:23 PM IST)
t-max-icont-min-icon

பிரான்சின் க்ரெய் நகரில் உள்ள ‘ரிவியே’ என்ற ஆணி தொழிற்சாலை, சரித்திரப் புகழ் பெற்றது.

பிரான்சின் க்ரெய் நகரில் உள்ள ‘ரிவியே’ என்ற ஆணி தொழிற்சாலை, சரித்திரப் புகழ் பெற்றது. 1888–ல் தியோடர் ரிவியே என்பவரால் தொடங்கப்பட்ட இந்தத் தொழிற்சாலை, இன்றுவரை தொடர்ந்து இயங்கிவருகிறது. ‘வாழும் பாரம்பரிய நிறுவனம்’ என்று புகழப்படும் இந்த தொழிற்சாலைக்கு, ‘துரு பிடிக்காத ஆலை’ என்ற பெயரும் உண்டு. அதற்கு காரணம், இரும்பு கம்பிகளால் கட்டமைக்கப்பட்ட இந்தத் தொழிற்சாலை இன்றும் கம்பீரமாக நிற்கிறதாம். 18–ம் நூற்றாண்டில் கட்டமைக்கப்பட்ட இரும்பு கட்டிடம் என்றாலும் துரு பிடிக்காமல் இருப்பதால், இங்கு தயாராகும் இரும்பு ஆணிகளுக்கு அதிக மவுசு இருக்கிறது. அதற்கு ஏற்ப, இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் எந்த பொருளும் அவ்வளவு சீக்கிரத்தில் துரு பிடிப்பதில்லை. அதற்கான காரணம் கேட்டால் சிரித்தே மழுப்புகிறார், அதன் உரிமையாளர்.

Next Story