இரவில் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் தனியார் வாகனங்களில் கட்டணம் கடும் உயர்வு
கோவையில் இரவில் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டதால், தனியார் வாகனங்களில் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர். ரெயில்நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்தது.
கோவை,
அரசு பஸ் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், தமிழ்நாடு முழுவதும் பஸ் போக்குவரத்து ஊழியர்கள் நேற்று இரவு திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், ஊட்டி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மொத்தம் 1,500 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த திடீர் வேலை நிறுத்தம் காரணமாக உடனடியாக பஸ்கள் நிறுத்தப்படவில்லை. கோவை மட்டுமின்றி பல்வேறு ஊர்களில் இருந்து இயக்கப்பட்ட பஸ்கள் பயணிகளை உரிய இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அந்த பகுதிகளில் இருந்து பயணிகளை பஸ்களில் ஏற்றவில்லை. இரவு 9 மணிக்கு பின்னர் பஸ்களை டெப்போவுக்கு கொண்டு வந்து நிறுத்தினார்கள்.
கிராமப்புற பகுதிகளில் இருந்து இயக்கப்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டதால் ஆலாந்துறை, தொண்டாமுத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பயணிகள் அவதிக்குள்ளானார்கள். கிராமப்புறங்களுக்கு தனியார் பஸ்கள் குறைந்த அளவே இயங்குவதால் அந்த பஸ்களிலும், மினி பஸ்களிலும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
கோவை காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பஸ் நிலையங்களில் இரவில் போதுமான பஸ்கள் இயங்கவில்லை. டிரைவர்கள் தாங்கள் ஓட்டி வந்த பஸ்களை சுங்கம், உக்கடம், மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள டெப்போக்களில் கொண்டு வந்து நிறுத்தினார்கள். இரவு 9 மணிக்கு மேல் கோவையில் அரசு பஸ் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்பட்ட பஸ்களும் இரவில் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து அரசு பஸ் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டக்குழு நிர்வாகி அப்துல் ரசீத் கூறியதாவது:-
22-வது கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது. 2.57 சதவீத சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். அரசு இதற்கு இன்னும் உடன்படாததால் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தள்ளப்பட்டு உள்ளோம். பொதுமக்களை சிரமப்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல. நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளோம்.
கோவை நகரில் இரவில் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. மதுரை, திருச்சி உள்ளிட்ட வெளியூர் செல்லும் பஸ்களும் டெப்போக்களில் நிறுத்தப்பட்டு உள்ளன. கோவை நகரில் இரவு நேரம் இயக்கப்படும் பஸ்களும் இயக்கப்படவில்லை. அனைத்து பஸ்களும் டெப்போக்களில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு உள்ளன. இன்று (வெள்ளிக்கிழமை) இந்த வேலை நிறுத்தம் முழு அளவில் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவையில் இருந்து இரவில் வெளியூர்களுக்கு பஸ்கள் செல்லாததால், ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து ரெயில்களிலும் பயணிகள் வழக்கத்தை விட அதிகமாக சென்றனர்.
பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக இரவு வேலைக்கு சென்றுவிட்டு வீடுகளுக்கு செல்பவர்களும், வெளியூர்களில் இருந்து கோவைக்கு வந்தவர்களும் பஸ் கிடைக்காமல் அவதி அடைந்தனர். ஆட்டோ, கால்டாக்சிக்களில் பலர் சொந்த இடங்களுக்கு திரும்பினார்கள். ஷேர் ஆட்டோக்களிலும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. வாடகை வாகனங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
காந்திபுரம் பகுதியில் வாகனத்துக்காக காத்துநின்ற ஒரு பயணி கூறும்போது, காந்திபுரத்தில் இருந்து சிங்காநல்லூர் பஸ் நிலையத்துக்கு ஆட்டோவில் செல்ல ரூ.250 வரையும், கால் டாக்சியில் செல்ல ரூ.500 வரையும் கட்டணம் வசூலிக்கிறார்கள். வெளியூர் செல்லும் ஆம்னி பஸ்களிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள். இதனால் சிரமப்படுகிறோம் என்று தெரிவித்தனர்.
அரசு பஸ் ஊழியர்களின் போராட்டம் காரணமாக, கோவை உள்ளிட்ட அனைத்து பஸ் டெப்போக்கள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சுங்கம் டெப்போ முன்பு பஸ் ஊழியர்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) அரசு பஸ் போக்குவரத்து முழுவதும் பாதிக்கும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் தற்காலிக ஊழியர்களை வைத்து பஸ்களை ஓரளவு இயக்க, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் நேற்று மாலை 6.30 மணி முதலே ஆங்காங்கே அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. பின்னர் மேட்டுப்பாளையம் காரமடை ரோட்டில் உள்ள அரசு பணிமனைக்கு டிரைவர்கள் பஸ்களை இயக்கி சென்றனர்.
இதனால் கிராமப்புறங்களுக்கு செல்ல வேண்டிய பயணிகள் வீடுகளுக்கு திரும்பி செல்ல முடியாமல் தவித்தனர்.

Related Tags :
Next Story