மது அருந்தியதை கண்டித்த போலீஸ்காரர்கள் மீது தாக்குதல் வாலிபர் கைது


மது அருந்தியதை கண்டித்த போலீஸ்காரர்கள் மீது தாக்குதல் வாலிபர் கைது
x
தினத்தந்தி 5 Jan 2018 3:45 AM IST (Updated: 5 Jan 2018 12:51 AM IST)
t-max-icont-min-icon

கடற்கரையில் மது அருந்தியதை கண்டித்த போலீஸ்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆலந்தூர், 

சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை பகுதிகளான கொட்டிவாக்கம் முதல் முட்டுக்காடு வரை தனியாக வரும் ஜோடிகளிடம் வழிப்பறி நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நீலாங்கரை போலீஸ்காரர்கள் சுப்பிரமணி, ரமேஷ் ஆகியோர் நீலாங்கரை கடற்கரை பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு வாலிபர் ஒருவர், கடற்கரை மணல் பரப்பில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருப்பதை கண்டனர். அவரிடம், இங்கு மது அருந்தக்கூடாது என கண்டித்தனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் திடீரென அந்த வாலிபர், போலீஸ்காரர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார், அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் அவர், நீலாங்கரையை சேர்ந்த ரகு (வயது 30) என தெரியவந்தது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், போலீஸ்காரர்களை தாக்கியதாக ரகுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story