அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் கலெக்டர் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில், அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்களின் பட்டியலை கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டு உள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில், அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்களின் பட்டியலை கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டு உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–
அம்மா திட்ட முகாம்தூத்துக்குடி மாவட்டத்தில், அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அம்மா திட்ட முகாம், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் நடத்தப்படுகிறது.
இந்த வாரத்துக்கான இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. முகாம் தூத்துக்குடி தாலுகாவில் கோரம்பள்ளம் 1, ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் கருங்குளம், திருச்செந்தூர் தாலுகாவில் திருநாவீருடையார்புரத்திலும், சாத்தான்குளம் தாலுகாவில் சாத்தான்குளத்திலும், கோவில்பட்டி தாலுகாவில் கொடுக்கம்பாறையிலும், விளாத்திகுளம் தாலுகாவில் என்.ஜெகவீரபுரம்த்திலும், எட்டயபுரம் தாலுகாவில் வீரப்பட்டியிலும், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் கச்சேரி தளவாய்புரத்திலும், கயத்தாறு தாலுகாவில் கொப்பம்பட்டியிலும் முகாம் நடக்கிறது.
உடனடியாக...இந்த முகாமில் மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு – இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக நிறைவேற்றப்பட உள்ளது. ஆகையால் முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.