தமிழகத்தில் 6 மாதத்தில் ஆட்சி கவிழ்ந்து விடும் தே.மு.தி.க. மாநில துணை செயலாளர் பேச்சு
தமிழகத்தில் 6 மாதத்தில் ஆட்சி கவிழ்ந்து கவர்னர் ஆட்சி வந்து விடும் என்று தே.மு.தி.க. மாநில துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பேசினார்.
ஆம்பூர்,
தமிழகம் முழுவதும் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காத தமிழக அரசை கண்டித்தும், நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க கோரியும் தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தே.மு.தி.க. சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி ஆம்பூர் வடபுதுப் பட்டில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையை முற்றுகை யிடும் போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஹரி கிருஷ்ணன், துணை செயலா ளர் கண்ணன், நகர செயலாளர் கள் பி.சங்கர், ஜெ.வெங்க டேசன், மகளிரணி செயலாளர் மீராராஜரத்தினம் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். மாதனூர் ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடேசன் வரவேற் றார்.
மாநில துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமை தாங்கி பேசியதாவது:-
தமிழகத்தில் 18 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும், 24 தனியார் சர்க்கரை ஆலை களும் உள்ளன. மொத்தமுள்ள 42 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளிலும் சேர்ந்து ரூ.2 ஆயிரம் கோடி நிலுவைத் தொகையை கரும்பு விவசாயி களுக்கு வழங்க வேண்டும். ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மட்டும் ரூ.11½ கோடி வழங்க வேண்டும். கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.
ஆட்சி கவிழ்ந்து விடும்
தமிழகத்தில் உள்ள கவர்னர், பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் போல் செயல்பட்டு வருகிறார். தமிழ கம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்னும் 6 மாதத்தில் தமிழக அரசு கவிழும். கவர்னர் ஆட்சி அமலுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோரிக்கை மனு
அதைத்தொடர்ந்து தே.மு.தி.க.வினர் 300-க்கும் மேற்பட்டோர் கூட்டுறவு சர்க் கரை ஆலைக்குள் நுழைந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத் தினர். அதையும் மீறி கட்சி யினர் சர்க்கரை ஆலைக்குள் சென்று கோஷம் எழுப்பி னர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சர்க்கரை ஆலை மேலாளர் ஆனந்தியிடம் கோரிக்கை மனு அளித்தார்.
இந்த போராட்டத்தில் பேரணாம்பட்டு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.குமார், தலைமை பொதுக்குழு உறுப் பினர்கள் நாகராஜ், தேவேந் திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெயகுமார், அவைத்தலைவர் மணி, பொருளாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை
இதேபோல் திருவலம் அருகே அம்முண்டியில் உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரைஆலையில் முற்றுகை போராட்டம் நடந்தது. மத்திய மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் நித்யா, முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோரிக்கைகளை வலி யுறுத்தி தே.மு.தி.க.வினர் சர்க்கரைஆலை அலுவல கத்தை முற்றுகையிட்டு கோஷ மிட்டனர்.

Related Tags :
Next Story