விவசாயிகள் உரம் வாங்குவதற்கு ஆதார் எண் கட்டாயம் வேளாண் அதிகாரி தகவல்


விவசாயிகள் உரம் வாங்குவதற்கு ஆதார் எண் கட்டாயம் வேளாண் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 5 Jan 2018 2:00 AM IST (Updated: 5 Jan 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் உரம் வாங்குவதற்கும், மத்திய அரசால் வழங்கப்படும் உர மானியம் பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

நெல்லை,

விவசாயிகள் உரம் வாங்குவதற்கும், மத்திய அரசால் வழங்கப்படும் உர மானியம் பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து நெல்லை மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

உரம் விற்பனை

நெல்லை மாவட்டத்தில் உள்ள 352 தனியார் உரம் விற்பனை கடைகள் மற்றும் 152 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு விற்பனை விவரம் பதிவு எந்திரங்கள் வழங்கப்பட்டு உள்ளன. உரம் விற்பனை நிலையங்களில் உள்ள உரங்களின் இருப்பு விவரங்கள் இந்த எந்திரங்களில் மறு பதிவேற்றம் செய்யும் பணி கடந்த 31–ந்தேதி நடைபெற்று முடிந்தது.

அதை தொடர்ந்து ஜனவரி மாதம் 1–ந் தேதியில் இருந்து விவசாயிகளின் ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே உரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

ஆதார் எண்

மத்திய அரசால் வழங்கப்படும் உர மானியம் நேரடியாக விவசாயிகளுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும், உரம் கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்கும் நோக்கில் அனைத்து சில்லறை உரம் விற்பனை நிலையங்களிலும் ஆதார் விவரங்களுடன் மட்டுமே உரம் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் முறைகேடான உரம் விற்பனையை தடுத்து, அரசு நிர்ணயித்த விலைக்கே உரங்களை பெற முடியும். விவசாயிகள் அல்லாதோர் உரம் வாங்குவதையும் தடுக்க முடியும்.

எனவே நெல்லை மாவட்ட விவசாயிகள் தங்களது ஆதார் எண் விவரங்களுடன் சென்று, உரம் விற்பனை நிலையங்களில் உரம் விற்பனை எந்திரத்தில் தாங்களம் வாங்கும் உரத்தின் விவரத்தை பதிவு செய்து உரம் வாங்க வேண்டும். மேலும் உரம் வாங்கியதற்கான ரசீதையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story