செங்குன்றத்தில் சாலையின் நடுவே போலீஸ் வாகனத்தை நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு
போலீஸ் நிலையம் எதிரே சாலையின் நடுவே போலீஸ் வாகனத்தை நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
செங்குன்றம்,
செங்குன்றம் போலீஸ் நிலையத்துக்கு சொந்தமான ரோந்து வாகனத்தை நேற்று மாலை போலீஸ் நிலையம் எதிரே உள்ள ஜி.என்.டி.சாலையின் நடுவே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதன் முன்புறம் போலீசாரின் மோட்டார் சைக்கிளையும் நிறுத்தி இருந்தனர். அந்த வாகனத்துக்கு பின்னால் நின்றபடி 2 போலீஸ்காரர்கள் நீண்டநேரம் அரட்டை அடித்தபடி இருந்தனர்.
சாலையின் நடுவே போலீஸ் வாகனம் நிறுத்தப்பட்டு இருந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆனால் இதை கண்டுகொள்ளாமல் போலீஸ்காரர்கள் இருவரும் அரட்டை அடித்தபடி இருந்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் சிலர் இந்த காட்சியை செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். இதை கவனித்த போலீஸ்காரர்கள், சாலையின் நடுவே நிறுத்தி இருந்த வாகனத்தை அப்புறப்படுத்தினர். இதனால் போக்குவரத்து சீரானது.
Related Tags :
Next Story