பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் தஞ்சை, கும்பகோணத்தில் பயணிகள் அவதி

பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் தஞ்சை, கும்ப கோணத்தில் பயணிகள் அவதிக்கு உள்ளாயினர். தனியார் பஸ்களில் கூட்டம் நிரம்பியது.
தஞ்சாவூர்,
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக சென்னையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் தொழிற் சங்கத்தினர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை என வந்த தகவலை அடுத்து தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
தஞ்சை பழைய பஸ்நிலையத்தில் வேலை நிறுத்தம் செய்த அரசு பஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பஸ்நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்த அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டன. அதில் இருந்த பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.
இதனால் வேலை முடிந்து வீட்டுக்கு செல்ல இருந்த பயணிகளும், பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளும் அவதிக்கு உள்ளாயினர்.
இதையடுத்து அங்கு நின்றுகொண்டிருந்த தனியார் பஸ்களில் பயணிகள் ஏறிச்சென்றனர். ஆனால் பஸ்நிலையத்தில் குறைந்த அளவிலான தனியார் பஸ்கள் மட்டுமே இருந்தது. தனியார் பஸ்களில் கூட்டம் நிரம்பியது. இதில் படியில் தொங்கியபடியே பயணிகள் சென்றனர். இதனால் கூட்டம் நிரம்பி வழிந்த இந்த தனியார் பஸ்களில் ஏறிச்செல்ல முடியாமல் பெண்கள், சிறுவர்கள் சிரமத்துக்கு உள்ளாயினர்.
மேலும், சிலர் பஸ்கள் கிடைக்காததால் தங்கள் வீடுகளுக்கு நடந்தே சென்றனர். கும்பகோணம், அரியலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவேண்டிய பஸ்களும் நிறுத்தப்பட்டதால் அதில் செல்ல இருந்த வெளியூர் பயணிகள் அடுத்து வரும் தனியார் பஸ்களுக்காக நீண்ட நேரம் பஸ்நிலையத்தில் காத்திருந்தனர்.
இந்தநிலையில், தஞ்சை பழைய பஸ்நிலையம் மற்றும் புதிய பஸ்நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து பஸ்களும் பணி மனைக்கு சென்றன. தஞ்சையில் 165-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படவில்லை. அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் சென்னை செல்ல இருந்த பயணிகளும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாயினர்.
அவர்கள் தனியார் பஸ்களில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதேபோல கும்பகோணத்தில் உள்ள அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பினர் வேலை நிறுத்தம் செய்து கும்பகோணம் அரசு தலைமை போக்குவரத்து கழகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கும்பகோணம் புதிய பஸ்நிலையத்திற்கு தொழிற்சங்கத்தினர் ஊர்வலமாக சென்றனர். இதையடுத்து பயணிகள் இறக்கிவிடப்பட்டு பஸ்நிலையத்தில் வெளியூர் செல்ல இருந்த பஸ்கள் அனைத்தும் பணிமனைக்கு சென்றன. இதில் கும்பகோணம் நாகை மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டது.
இதனால் வீட்டுக்கு செல்ல பஸ்நிலையத்தில் காத்திருந்த பள்ளி-கல்லூரி மாணவர்கள் மற்றும் வெளியூர் செல்ல இருந்த பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
கும்பகோணத்தில் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிய படி பயணிகள் சென்றனர்.

Related Tags :
Next Story