பா.ஜனதா தொண்டர் கொலை மங்களூரு பகுதியில் முழுஅடைப்பு போராட்டம் பதற்றம்-போலீஸ் குவிப்பு
பா.ஜனதா தொண்டர் கொல்லப் பட்டதை கண்டித்து மங்களூரு பகுதியில் நேற்று முழுஅடைப்பு நடைபெற்றது.
மங்களூரு,
பா.ஜனதா தொண்டர் கொல்லப் பட்டதை கண்டித்து மங்களூரு பகுதியில் நேற்று முழுஅடைப்பு நடைபெற்றது. அதோடு இழப்பீடு கேட்டு கொலையானவரின் உடலை எடுத்துச்செல்ல விடாமல் பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
மங்களூரு அருகே காட்டிபள்ளா பகுதியை சேர்ந்தவர் தீபக் ராவ் என்கிற தீபு(வயது 22).
பா.ஜனதா தொண்டர் கொலை
பா.ஜனதா தொண்டரான இவரை மர்மநபர்கள் நேற்று முன்தினம் வெட்டிக் கொலை செய்தனர். காரில் வந்த 4 மர்ம நபர்கள், தீபக் ராவை வழிமறித்து மிளகாய் பொடி தூவி அவரை தீர்த்துக்கட்டியது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சூரத்கல் போலீசார், சினிமா பட பாணியில் துரத்திச் சென்று கொலையாளிகள் 4 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே கொலையான தீபக் ராவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
பிரேத பரிசோதனை
நேற்று முன்தினம் இரவே அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அங்குள்ள பிணவறையில் வைக்கப்பட்டு இருந்தது. கொலையான தீபக் ராவின் உடலை ஊர்வலமாக அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்ல பா.ஜனதாவினர் முயன்றனர். ஆனால் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போது ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடக்கக்கூடும் என கருதிய போலீசார், அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இருப்பினும் அவரது உறவினர்களும், பா.ஜனதாவினரும் பிணவறை அருகே குவிந்திருந்தனர். நேற்று அதிகாலை 5 மணி அளவில் பிணவறையின் பின்வாசல் வழியாக தீபக் ராவின் உடலை போலீசார் எடுத்துச் சென்று அமரர் ஊர்தி மூலம் காட்டிபள்ளாவுக்கு கொண்டு சென்றனர். அமரர் ஊர்தியில் தீபக் ராவின் குடும்பத்தினரும் அழைத்துச் செல்லப்பட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பா.ஜனதாவினரும், காட்டிபள்ளா பகுதி மக்களும் நூற்றுக்கணக்கானோர் அங்கு குவிந்தனர். போலீசார், அவசரம், அவசரமாக தீபக் ராவின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்தாமல் அடக்கம் செய்ய கொண்டு செல்ல முயன்றனர்.
போராட்டம்
இதனால் ஆத்திரமடைந்த பா.ஜனதாவினரும், அந்தப் பகுதி மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உடலை அங்கிருந்து எடுத்துச் செல்ல விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கொலையான தீபக் ராவின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைவைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் கர்நாடக அரசுக்கு எதிராகவும், முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். இதன் காரணமாக அங்கு பதற்றம் நிலவியது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் சசிகாந்த் செந்தில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் போது, கொலையான தீபக் ராவின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக தெரிவித்தார்.
ரூ.10 லட்சம் இழப்பீடு
அந்த இழப்பீட்டு தொகையை இன்று(அதாவது நேற்று) மாலை தருவதாகவும் கூறினார். ஆனால் அதனை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் ரூ.10 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கலெக்டர் சசிகாந்த் செந்தில், அரசு சார்பில் ரூ.5 லட்சமும், மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.5 லட்சமும் என மொத்தம் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், மேலும் தீபக் ராவின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்த பின்னரே அடக்கம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட போராட்டக்காரர்கள், போராட்டத்தை கைவிட்டனர். அதன்பின்னர் தீபக் ராவின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. அதையடுத்து அவரது வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மயானத்தில் தீபக் ராவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது வீட்டில் இருந்து தீபக் ராவின் உடல் ஊர்வலமாக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. இதையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
2 பஸ்கள் மீது கல்வீச்சு
இதற்கிடையே தீபக் ராவ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் நேற்று முன்தினம் சூரத்கல் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு மங்களூருவில் இருந்து சூரிஞ்சி நோக்கி 2 தனியார் டவுன் பஸ்கள் சென்று கொண்டிருந்தன.
அந்த 2 பஸ்கள் மீது மர்மநபர்கள் கற்களை வீசி தாக்கினர். இதில் 2 பஸ்களின் கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கின.
2 பேருக்கு கத்திக்குத்து
மேலும் மங்களூரு சூரத்கல் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த முகமது பாசீர் (22), அவரது நண்பர் ஆகியோரை மர்மநபர்கள் வழிமறித்து சரமாரியாக தாக்கியதுடன் கத்தியால் குத்தினர். இதில் 2 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் 2 பேரும் மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் இருதரப்பினர் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை காணப்பட்டது. பதற்றத்தை தொடர்ந்து சூரத்கல், காட்டிபள்ளா, கைகம்பா ஆகிய பகுதிகளில் 4 பேர் ஒன்றாக கூடி நிற்கக் கூடாது என போலீசார் தடை உத்தரவு பிறப்பித்திருந்தனர். இந்த தடை உத்தரவு நேற்று நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
முழுஅடைப்பு
அத்துடன் தீபக் ராவ் கொலையை கண்டித்து நேற்று சூரத்கல், காட்டிபள்ளா, கைகம்பா பகுதிகளில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி அந்தப் பகுதிகளில் ஓட்டல்கள், பேக்கரிகள், மளிகைக்கடைகள் என அனைத்து வியாபார நிறுவனங்களும் மூடப்பட்டு இருந்தன. மேலும் முழுஅடைப்பு காரணமாக தனியார், அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. வாடகை கார்கள், ஆட்டோக்களும் ஓடவில்லை. அதேப் போல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.
இதனால் சூரத்கல், காட்டிபள்ளா, கைகம்பா பகுதிகளில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. மொத்தத்தில் இந்த முழுஅடைப்பால் சூரக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த முழுஅடைப்பை முன்னிட்டு அந்தப் பகுதிகளில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் கண்ணீர் புகை குண்டு வீசும் வாகனங்களும் அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தன.
சாலை மறியல்- கைது
இந்த நிலையில் காங்கிரஸ் அரசு பதவி ஏற்றத்தில் இருந்து தட்சிணகன்னடா மாவட்டத்தில் மட்டும் கடந்த 4 ஆண்டுகளில் இந்து அமைப்பினர் 24 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர் எனவும், இந்து அமைப்பினர் கொல்லப்படுவதை தடுக்க தவறிய முதல்-மந்திரி சித்தராமையா, மாநில வனத்துறை மந்திரியும், மாவட்ட பொறுப்பு மந்திரியுமான ரமாநாத் ராய் ஆகியோர் பதவி விலக கோரியும் மங்களூரு டவுனில் பி.வி.எஸ். சர்க்கிள் பகுதியில் நேற்று மாலை 5 மணி அளவில் பா.ஜனதாவினர் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் மங்களூரு டவுன் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்துபோக கூறினர். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் வேன்களில் அழைத்துச் சென்று, அந்தப் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த போராட்டத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Tags :
Next Story