புனே வன்முறை சம்பவம் தொடர்பாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுடன் பிரகாஷ் அம்பேத்கர் சந்திப்பு
புனே வன்முறை சம்பவம் தொடர்பாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை பிரகாஷ் அம்பேத்கர் சந்தித்து பேசினார்.
மும்பை,

சந்திப்பு
புனே மாவட்டம் பீமா- கோரேகாவ் போர் நினைவுச்சின்னம் அருகே கடந்த திங்கட்கிழமை இரு பிரிவினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. இதில் ராகுல் என்ற வாலிபர் பலியானார். நேற்று முன்தினம் நடந்த முழு அடைப்பு போராட்டத்தில் பஸ், ரெயில் சேவைகள் முடங்கியதால், பொதுமக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
பரபரப்பான இந்த சூழலில், நேற்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை பிரகாஷ் அம்பேத்கர் சந்தித்து பேசினார். அப்போது, பீமா- கோரேகாவ் வன்முறை சம்பவம் தொடர்பாக இருவரும் விவாதித்தனர். இதுபற்றி பிரகாஷ் அம்பேத்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வன்முறைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் என்னிடம் உறுதியளித்தார். நீதி விசாரணையையொட்டி, நீதிபதி குழுவை பரிந்துரைக்குமாறு ஐகோர்ட்டு தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
நக்சலைட்டுகளுடன் தொடர்பு இல்லை
நீதிபதிகளில் ஒருவர் விசாரணை கமிஷனுக்கு தலைமை வகிப்பார். தவறு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க அக்குழு பரிந்துரை செய்யும். தலித் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நக்சலைட்டு இயக்கத்துடனோ அல்லது பயங்கரவாத அமைப்புடனோ தொடர்பு கிடையாது.
இவ்வாறு பிரகாஷ் அம்பேத்கர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story