ஸ்ரீவைகுண்டத்தில் பிளஸ்–2 மாணவர் தற்கொலை பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு
ஸ்ரீவைகுண்டத்தில், பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த பிளஸ்2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவைகுண்டம்,
ஸ்ரீவைகுண்டத்தில், பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த பிளஸ்2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிளஸ்–2 மாணவர்தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் இல்லத்தார் தெருவைச் சேர்ந்தவர் ராமதாஸ். கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இளைய மகன் சபரிஷ் (வயது 18). இவர் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்–2 படித்து வந்தார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு ராமதாசுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், சபரிஷிடம் கடையில் மருந்து வாங்கி வருமாறு தாயார் கூறினார். ஆனால் அவர், மருந்து வாங்க மறந்து விட்டார். இதனை பெற்றோர் கண்டித்தனர்.
தூக்கு போட்டு தற்கொலைஇதனால் மனமுடைந்த அவர், சம்பவத்தன்று இரவில் வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் சேலையால் தூக்குப்போட்டு தொங்கி உள்ளார். சிறிதுநேரத்தில் கண்விழித்த பெற்றோர், அவர் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். அவருடைய உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஸ்ரீவைகுண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த சபரிஷின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.