ஒருமாத ஊதியத்தை பொங்கல் போனசாக வழங்க கோரி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஒருமாத ஊதியத்தை பொங்கல் போனசாக வழங்க கோரி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Jan 2018 3:30 AM IST (Updated: 6 Jan 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

ஒரு மாத ஊதியத்தை பொங்கல் போனசாக வழங்க வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி,

திருச்சி மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம்அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் எலிசபெத்ராணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் ஆரோக்கியசாமி, சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி செயலாளர் ராஜேந்திரன் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியம் பொங்கல் போனசாக அரசு வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமும், பணிக்கொடை ரூ.5 லட்சமும், 21 மாத நிலுவை தொகையும் வழங்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் காலிபணியிடங்களை நிரப்பிட வேண்டும். 8–வது ஊதியக்குழு அறிவித்த புதிய ஊதியத்தை அனைத்து ஊழியர்களுக்கும் உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இணை செயலாளர் ஜெயராஜ் நன்றி கூறினார். இதையடுத்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தனர்.


Next Story