ஜமா அத்துல் உலமா சபை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்–பொதுக்கூட்டம் மத்திய அரசை கண்டித்து நடந்தது


ஜமா அத்துல் உலமா சபை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்–பொதுக்கூட்டம் மத்திய அரசை கண்டித்து நடந்தது
x
தினத்தந்தி 6 Jan 2018 2:30 AM IST (Updated: 6 Jan 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில், மத்திய அரசை கண்டித்து ஜமா அத்துல் உலமா சபை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில், மத்திய அரசை கண்டித்து ஜமா அத்துல் உலமா சபை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை சார்பில், பெண்கள் பாதுகாப்பு மசோதா என்னும் பெயரில் ‌ஷரீஅத் சட்டத்தில் கை வைக்கும் மத்திய அரசின் இந்துத்துவ போக்கை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே நேற்று மாலை 5 மணிக்கு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமா சபை மாநில பொருளாளர் முஜீபுர் ரகுமான் தலைமை தாங்கினார். மாவட்ட உலமா சபை தலைவர் முகம்மது பாரூக் பாஸி, மாநகர தலைவர் நூருல்லா ஆலிம், ஐக்கிய ஜமாஅத் தலைவர் ஹாஜி.அப்துல்கபூர், ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பு ரகுமான் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை சார்பில், பெண்கள் பாதுகாப்பு மசோதா என்னும் பெயரில் ‌ஷரீஅத் சட்டத்தில் கை வைக்கும் மத்திய அரசின் இந்துத்துவ போக்கை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வு கட்சி மாவட்ட செயலாளர் கிதர் பிஸ்மி, மாநகர உலமா சபை செயலாளர் நாகூர் மீரான்,

எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட பொருளாளர் மைதீன் கனி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா காதர் மைதீன் மற்றும் மாவட்ட அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள், உலமாக்கள் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்பு நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டம்

அதன் பின்னர் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் துணை வேந்தர் சபாபதி மோகன், தமிழ் மாநில ஜமா அத்துல் உலமா சபை துணை பொது செயலாளர் அப்துல் அஜிஸ், மாநகர ஜமா அத்துல் உலமா சபை துணை தலைவர் இம்தாதுல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

கூட்டத்தில் மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story