மேல்பாடி அருகே விவசாயி வெட்டிக் கொலை
மேல்பாடி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
மேல்பாடியை அடுத்த தாதிரெட்டிபள்ளி அருகே உள்ள பாலமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 53), விவசாயி. இவருக்கு மணிகண்டன் (27) என்ற மகனும், பவ்யா (30) என்ற மகளும் உள்ளனர். இவரது மனைவி ஜோதி (49) கடந்த ஆண்டு இறந்து விட்டார். பவ்யா திருமணமாகி காஞ்சீபுரத்திலும், மணிகண்டன் காட்பாடியிலும் வசித்து வருகின்றனர். இதனால் உதயகுமார் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நேற்று அதிகாலை யாரோ வந்து கதவை தட்டியதாகவும், உதயகுமார் வெளியே வந்து பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போது உதயகுமாரை மர்ம நபர்கள் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டனர். முகம், கை மற்றும் உடலில் வெட்டுக்காயம் அடைந்த உதயகுமார் தனது வீட்டுக்கு வெளியே சில அடி தூரத்தில் துடிதுடிக்க பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவலறிந்த ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், பொன்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் மேல்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்ப நாய் சன்னி சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயகுமாரை கொலை செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட உதயகுமாரின் தம்பி கோபிநாத் வாலாஜா போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story