சேலத்தில் ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சேலத்தில் ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Jan 2018 2:45 AM IST (Updated: 6 Jan 2018 1:32 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் நேற்று ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சேலம்,

தொழிலாளர்களின் பிரச்சினைகளை அலட்சியப்படுத்தும் தொழிலாளர் நலத்துறையை கண்டித்தும், கட்டுமானம், உடலுழைப்பு நலவாரியங்களை சீரமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் நேற்று ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வேணுகோபால் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பரமசிவம், ஜெயராமன், முனுசாமி, ஜீவானந்தம் உள்பட தொழிற்சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது நலவாரியங்கள், மாநில ஆலோசனை வாரியம் உள்ளிட்ட முத்தரப்பு குழுக்களை அமைத்து செயல்படுத்த வேண்டும், 480 நாட்கள் பணிபுரிந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நிலுவையில் உள்ள ஓய்வூதியம் உள்ளிட்ட பல ஆயிரம் மனுக்களை தொழிலாளர் பயன்பெறும் வகையில் தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Next Story