மோட்டார் வாகன சட்ட திருத்தம்: ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


மோட்டார் வாகன சட்ட திருத்தம்: ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Jan 2018 3:15 AM IST (Updated: 6 Jan 2018 1:42 AM IST)
t-max-icont-min-icon

ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில், திண்டுக்கல் நாகல்நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திண்டுக்கல்,

ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில், திண்டுக்கல் நாகல்நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ஜெயமணி தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் துரை சந்திரமோகன், துணை செயலாளர் ராஜாங்கம் மற்றும் நிர்வாகிகள் சுப்பிரமணி, பவுல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்வதை மத்திய அரசு கைவிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் வழங்கக்கூடாது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர் நலவாரியங்களின் செயல்பாடுகளை சீர்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.


Next Story