இந்திரா மலிவு விலை உணவகங்களில் பல கோடி ரூபாய் முறைகேடு: சித்தராமையா உள்பட 5 பேர் மீது ஊழல் தடுப்பு படையில் புகார்
பெங்களூருவில் இந்திரா மலிவு விலை உணவகங்களில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக கூறி முதல்-மந்திரி சித்தராமையா உள்பட 5 பேர் மீது ஊழல் தடுப்பு படையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,

சித்தராமையா மீது புகார்
கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு மாநகராட்சி பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வார்டுகளில் இந்திரா மலிவு விலை உணவகம் திறக்கப்பட்டுள்ளது. மற்ற வார்டுகளில் இந்திரா மலிவு விலை உணவகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே இந்திரா மலிவு விலை உணவகங்கள் அமைக்க ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.65 கோடி ஊழல் நடந்திருப்பதாக பா.ஜனதா பிரமுகரான என்.ஆர்.ரமேஷ் குற்றச்சாட்டு கூறி இருந்தார்.
இந்த நிலையில், இந்திரா மலிவு விலை உணவகங்களில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி முதல்-மந்திரி சித்தராமையா, மந்திரி கே.ஜே.ஜார்ஜ், மாநகராட்சி மேயர் சம்பத்ராஜ், மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத், அரசு அதிகாரி மனோஜ் ஆகிய 5 பேர் மீது கர்நாடக மாநில தொழிலாளர் வேதிகே அமைப்பின் தலைவர் நாகேஷ், ஊழல் தடுப்பு படையில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
பல கோடி ரூபாய் முறைகேடு
அந்த புகாரில், பெங்களூரு நகரில் 100-க்கும் மேற்பட்ட வார்டுகளில் இந்திரா மலிவு விலை உணவகங்கள் உள்ளன. ஒவ்வொரு உணவகத்திலும் தினமும் 150 முதல் 200 பேருக்கு மட்டுமே உணவு வகைகள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் ஒவ்வொரு உணவகங்களிலும் தினமும் 400 முதல் 500 பேருக்கு காலை, மதியம், இரவு உணவு வகைகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அரசும், மாநகராட்சியும் அறிவித்துள்ளது. ஆனால் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே உணவு வகைகளை வழங்கிவிட்டு, அதிகப்படியான மக்களுக்கு உணவுகள் வழங்குவதாக பொய்யான கணக்குகளை காட்டி, பல கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளனர்.
இந்திரா மலிவு உணவகங்கள் அமைக்க ஒதுக்கப்பட்ட நிதியிலும் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. இந்த முறைகேட்டில் முதல்-மந்திரி சித்தராமையா, மந்திரி கே.ஜே.ஜார்ஜ், மாநகராட்சி மேயர் சம்பத்ராஜ், மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத், அரசு அதிகாரி மனோஜ் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். ஆனால் நாகேஷ் கொடுத்த புகாரின் பேரில் ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை.

Related Tags :
Next Story