ராணுவ அதிகாரியின் மகளை மானபங்கம் செய்த தையல்காரர் போலீசார் விரட்டி பிடித்தனர்
ராணுவ அதிகாரியின் மகளை மானபங்கம் செய்த தையல்காரரை போலீசார் விரட்டி பிடித்தனர்.
மும்பை,
ராணுவ அதிகாரியின் மகளை மானபங்கம் செய்த தையல்காரரை போலீசார் விரட்டி பிடித்தனர்.
ராணுவ அதிகாரி மகள்மும்பை கார் பகுதியை சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவரின் 20 வயது மகள் சம்பவத்தன்று தனது தோழி ஒருவருடன் அங்குள்ள சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் திடீரென ராணுவ அதிகாரியின் மகளை பிடித்து மானபங்கம் செய்து உள்ளார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த இளம்பெண் உதவி கேட்டு கூச்சல் போட்டார். இதனால் பயந்து போன வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
இளம்பெண்ணும், அவரது தோழியும் வாலிரை பிடிப்பதற்காக விரட்டி சென்றனர். அப்போது, ஜூகுவில் நடந்த ஒரு கொலை சம்பவத்தில் தொடர்புடையவரை பிடிப்பதற்காக குற்றப்பிரிவு போலீசார் அந்த வழியாக வந்து கொண்டிருந்தனர்.
தையல்காரர் கைதுஅப்போது இளம்பெண்கள் இரண்டு பேர் வாலிபரை சத்தம் போட்டபடி துரத்தி செல்வதை கவனித்த போலீசார் உடனே அந்த வாலிபரை பிடிப்பதற்காக விரட்டினர். அந்த வாலிபர் தப்பிக்கும் முயற்சியில் ஆட்டோ ஒன்றில் ஏறினார். ஆனால் டிரைவர் ஆட்டோவை எடுக்க மறுத்துவிட்டார்.
இதையடுத்து மீண்டும் ஓட்டம் பிடித்த அந்த வாலிபர் அங்குள்ள எஸ்.வி. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்னால் சென்று மறைந்து கொண்டார்.
போலீசார் அங்கு வந்து அவரை மடக்கி பிடித்து, கார் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர்.
விசாரணையில் அவரது பெயர் ரஷித் முல்லா (வயது22) என்பதும், அவர் தையல்காரர் என்பதும் தெரியவந்தது. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டார்.