முன்னாள் படை வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமை தாங்கினார். இந்த சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்கள் என 60 முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அப்போது மாவட்ட கலெக்டர், திருமண நிதியுதவியாக 4 பேருக்கு ரூ.80 ஆயிரத்திற்கான காசோலைகளையும், கல்வி உதவித்தொகையாக 7 பேருக்கு ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 900-க்கான காசோலைகளையும் மானியத்துடன் கூடிய வங்கிக்கடனாக ஒருவருக்கு ரூ.37 ஆயிரத்து 119 மதிப்பிலான காசோலையையும் வழங்கினார்.
பின்னர் முன்னாள் படை வீரர்கள் தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர். அதை பெற்றுக்கொண்ட அவர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்த கூட்டத்தில் முன்னாள் படை வீரர் நலன் உதவி இயக்குனர் அமிருன்னிசா மற்றும் திரளான அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story