போலீசாரின் தொப்பி நிறத்தை மாற்றக்கூடாது மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தல்
ராஜீவ்காந்தி மனித உரிமை விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி,
புதுவை மாநிலம் பிரெஞ்சு கலாசாரத்தை உள்ளடக்கிய, பிற மாநிலங்களில் இருந்து தனித்துவத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாகும். இந்த நிலையில் சுற்றுலா ரோந்து போலீசாருக்கு நீல நிற தொப்பி மற்றும் கையில் நீல நிற பேட்ஜ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயல் புதுச்சேரி போலீசாரின் தனித்துவத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. பிரெஞ்சு கலாசாரத்தை பிரதிபலிக்கும் சிவப்பு நிற தொப்பியை, நீலநிறத்துக்கு மாற்றியிருப்பது ஏற்புடையது அல்ல. எனவே சுற்றுலா போலீசாருக்கு நீல நிற தொப்பி வழங்கப்பட்டுள்ளதை மறுபரிசீலனை செய்து, சிவப்பு நிற தொப்பி வழங்கவேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story