கம்ப்யூட்டர் விற்பனை கண்காட்சி நாராயணசாமி தொடங்கி வைத்தார்
புதுச்சேரி தகவல் தொழில்நுட்ப விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் கம்ப்யூட்டர் விற்பனை மற்றும் கண்காட்சி தொடங்கியது.
புதுச்சேரி,
புதுச்சேரி தகவல் தொழில்நுட்ப விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் கம்ப்யூட்டர் விற்பனை மற்றும் கண்காட்சி ஜெயராம் திருமண நிலையத்தில் தொடங்கியது. இதை முதல்- அமைச்சர் நாராயணசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சபாநாயகர் வைத்திலிங்கம், அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.
நிகழ்ச்சியில் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் வேணுகோபால், தகவல் தொழில்நுட்ப விற்பனையாளர்கள் சங்க தலைவர் சவுந்தர பாண்டியன், செயலாளர் சபரிநாதன், துணைத்தலைவர் ராஜேஷ், நிர்வாகிகள் அரவிந்தன், ஸ்ரீதர், சிவராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இந்த கண்காட்சியில் முன்னணி நிறுவனங்களின் கம்ப்யூட்டர், லேப்டாப், பிரிண்டர், ஸ்கேனர், 3டி பிரிண்டர், சாப்ட்வேர், சி.சி.டி.வி.கேமரா உள்பட பல்வேறு தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் 75 அரங்குகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியில் மாணவர்களுக்கு தொழில்நுட்ப சாதனங்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்று தகவல் தொழில்நுட்ப விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். வருகிற 7-ந் தேதி வரை இந்த கண்காட்சி நடக்கிறது.
Related Tags :
Next Story